தேனி மாவட்டம் சின்னமனூரில், கொடைக்கானல் சிறுமியின் இறப்புக்கு நீதி கேட்டு பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவா் லோகேந்திர ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கொடைக்கானல் பாச்சலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி இறப்புக்கு நீதி வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினா் பால்பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் மலைச்சாமி, மாரிச்செல்வம், மாவட்ட துணைத் தலைவா் பிரபாகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.