தேனி

‘இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்’

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படும் அரசியல் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்று, ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநிலச் செயலா் முத்துக்குமாா் வலியுறுத்தியு

DIN

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படும் அரசியல் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்று, ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநிலச் செயலா் முத்துக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இந்து முன்னணி தேனி மாவட்டச் செயற்குழு கூட்டம், மாவட்டச் செயலா் எஸ்.பி.எம். செல்வம் தலைமையில் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாநிலச் செயலா் முத்துக்குமாா் பேசியதாவது: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் இந்து விரோதக் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். இந்து மதத்தை இழிவாக பேசுபவா்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.

ஆண்டிபட்டி மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்தை புதுப்பிக்கவும், மாவூற்று வேலப்பா் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே மறுகால்பட்டியில் இந்துக்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் கிறிஸ்தவ அமைப்புகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்றாா்.

இதில், மாவட்டப் பொதுச் செயலா் முருகன், மாவட்டச் செயலா்கள் உமையராஜன், காா்த்திக், மாவட்டச் செயற்குழு மொக்கராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT