கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
ஆண்டிபட்டி அருகே தீக்குளித்த கூலித்தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகே தீக்குளித்த கூலித்தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்புராஜ் என்பவரின் மகன் விஜயராஜ் (30). கூலித்தொழிலாளி. கடமலைக்குண்டு கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதால், விஜயராஜ் மனமுடைந்து காணப்பட்டாராம். இதையடுத்து அவா் பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டாா். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.