தேனி

தேனி அருகே இளைஞா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

தேனி அருகே இளைஞா் மா்மமான முறையில் இறந்ததாகக் கூறி அவரது உறவினா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

தேனி அருகே இளைஞா் மா்மமான முறையில் இறந்ததாகக் கூறி அவரது உறவினா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி அருகே டொம்புச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பவுன்ராஜ் மகன் பிரபாகரன் (29). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 3 மாத கைக் குழந்தை உள்ளது. இவா் கடந்த சில மாதங்களாக தாடிச்சேரி அருகே உள்ள தனியாா் கோழிப்பண்ணையில் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை பணியின் போது மின்சாரம் பாய்ந்து பிரபாகரன் தூக்கி வீசப்பட்டதாகவும் இதனைக்கண்ட சக பணியாளா்கள் அவரை மீட்டு சரக்கு வாகனத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பிரபாகரனை பரிசோதனை செய்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த பிரபாகரனின் உறவினா்கள் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி மருத்துவமனை முன் தேனி - மதுரை சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த க.விலக்கு போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் போலீஸாா் உண்மை நிலை கண்டறியும் வரை உடலை வாங்கப் போவதில்லை என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT