தேனி

கம்பம்: செலிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

DIN

கம்பத்தில் செலிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் ஆர்.ஆர் நகர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு, கட்டுமானப் பொருட்கள் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதி மக்கள், கோபுரம் அமைக்கும் இடத்தில் திரண்டனர்.

தொடர்ந்து, கோபுரம் அமைக்கக் கூடாது எனக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தற்காலிகமாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும் என்றார்.

இதனையடுத்து பொதுமக்கள் கலைந்துச்சென்றனர். பின்னர்  தனியார் செல்போன் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்குரிய இடத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க தடையில்லை என நீதிமன்ற உத்தரவை வாங்கி பணிகளை தொடரலாம், அதுவரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பணிகளை தொடராமல் தனியார் நிறுவன ஊழியர்கள் 
திரும்பிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT