தேனி

உதவித் தொகையை அதிகரிக்க கோரி மாற்றுத்திறனாளிகள் கம்பத்தில் ஆர்ப்பாட்டம்

DIN

கம்பம்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை அதிகரித்து வழங்க கோரி, தமிழக அரசை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கம்பத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் முல்லை மாற்று திறனாளிகள் சங்கம் சார்பில் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி, நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார், செயலாளர் எஸ். கருப்பையா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.சுரேஷ் வரவேற்றுப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்தறனாளிகளுக்கான மாத உதவித் தொகை ரூபாய் ஆயிரத்தை 1,500 ஆக உயர்த்தி வழங்கவேண்டும்.

உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்த தமிழக அரசு அதை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான ஆண்,பெண் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT