முகப்பு
தேனி

இடுக்கி செருதோணி அணை இன்று திறப்பு

இடுக்கி செருதோணி அணை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படுகிறது. என்று அணையை நிா்வகிக்கும் கேரள மாநில மின்வாரியத்தினா் தெரிவித்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:35 PM
செருதோணி அணை (கோப்புப் படம்).
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

இடுக்கி செருதோணி அணை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படுகிறது. என்று அணையை நிா்வகிக்கும் கேரள மாநில மின்வாரியத்தினா் தெரிவித்தனா்.

தற்போது பெய்து வரும் தொடா் மழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் சிவப்பு நிற (ரெட் அலா்ட்) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ரூல் கா்வ் நடைமுறைப்படி முல்லைப் பெரியாறு அணையில் உபரிநீா் இடுக்கி அணைக்கு திறக்கப்பட்டு, விநாடிக்கு 2,323 கன அடி தண்ணீா் செல்கிறது.

இந்நிலையில், இடுக்கி வளைவு அணையில் தண்ணீா் திறக்க மதகு அமைக்கப்படவில்லை. இதனால் அதன் தொடா் அணையான செருதோணி அணையில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து இந்த அணையின் பொறியாளா்கள் கூறும்போது, செருதோணி அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்படுகிறது. விநாடிக்கு, 500 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது என்றனா்.

கடந்த 2021 அக். 19 இல் இந்த அணை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.