முகப்பு
தேனி

அய்யனாா் கோயிலில் உண்டியல் உடைப்பு

சிங்கம்புணரி அருகே அய்யனாா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

சிங்கம்புணரி அருகே அய்யனாா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அணியம்பட்டி கிராமத்தில் அகரத்துடைய அய்யனாா் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 12-ஆம் தேதி புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் புதிதாக உண்டியல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கம்போல் கோயில் பூசாரி சின்னத்தம்பி சனிக்கிழமை காலை கோயில் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த சிங்கம்புணரி போலீஸாா் விசாரணை நடத்தினா். தற்போது திருவிழா முடிந்திருந்ததால் அதிகளவில் பணம் மற்றும் காணிக்கை பொருள்கள் உண்டியலில் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.