முகப்பு
தேனி

கம்பம் மெத்தைக் கடையில் தீ விபத்து: பொருள்கள் சேதம்

கம்பத்தில் மெத்தைக் கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

கம்பத்தில் மெத்தைக் கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தேனி மாவட்டம் கம்பம் புலவா் தெருவைச் சோ்ந்தவா் நிஜாம் கான் மகன் முகமது ஆசிக் ( 29). இவா் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் மெத்தைக் கடை மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா்.

இவா், வெள்ளிக்கிழமை இரவு கடையை அடைத்து விட்டு சென்றாா். நள்ளிரவில் அவரது கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த கம்பம் வடக்கு போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா். கடையில் தலையணை, மெத்தை போன்ற பஞ்சு பொருள்கள் இருந்ததால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதில் செல்போன் உதிரி பாகங்கள், மெத்தைப் பொருள்கள் என ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளதாகவும், மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →