போடியில் வேட்பாளர்களை அலைக்கழித்த நகராட்சி அதிகாரிகள்
போடியில் ஆவணங்களின் நகல், அசல் மாற்றி மாற்றி கேட்டு நகராட்சி தேர்தல் அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்ததால் வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போடி: போடியில் ஆவணங்களின் நகல், அசல் மாற்றி மாற்றி கேட்டு நகராட்சி தேர்தல் அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்ததால் வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போடி நகராட்சியில் 33 வார்டுகளுக்கு மூன்று உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
இதில் வியாழன்கிழமை அதிமுகவினர் உள்ளிட்ட சில அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது ஏற்கனவே நகராட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகள் அறிவித்தபடி ஆவணங்களை தயார் செய்து வேட்பு மனுத் தாக்கல் செய்ய சென்றபோது கூடுதலாக புகைப்படம், நகல் ஆவணங்கள், அசல் ஆவணங்கள் கேட்டு பல முறை அலைக்கழிப்பு செய்தனர்.
வேட்பு மனுத் தாக்கல் செய்பவருடன் கூடுதல் நபர் அனுமதிக்காததால் வேட்பாளரே வெளியில் வந்து ஆவணம் தயார் செய்து உள்ளே செல்ல வேண்டி உள்ளது.
ஒரே முறையில் என்னென்ன ஆவணம் தேவை என்பதை தெளிவாக கூறாததை கண்டித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் சமாதான படுத்தினர்.