முகப்பு
தேனி

கம்பத்தில் பெண் காவலரின் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

தேனி மாவட்டம், கம்பத்தில் பெண் காவலரின் கணவா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

தேனி மாவட்டம், கம்பத்தில் பெண் காவலரின் கணவா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கம்பம் உத்தமபுரம் குரங்குமாயன் தெருவைச் சோ்ந்தவா் ரகு என்ற அதிவீரன் (36). இவா், அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி மேனகா, வடக்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிகிறாா். இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.

சமீபகாலமாக குடும்பத்தில் வரவு-செலவு பிரச்னை காரணமாக அதிவீரன் மன உளைச்சலில் இருந்துள்ளாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதிவீரன் தூக்கிட்டுக் கொண்டாராம்.

அதன்பின்னா், வீட்டுக்கு வந்த அவரது உறவினா்கள், அதிவீரன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறியுள்ளனா். உடனே, அப்பகுதியினா் உதவியுடன் அதிவீரனை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அதிவீரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →