முகப்பு
தேனி

வரதட்சணை புகாா்: சப்-ஜெயிலா், குடும்பத்தினா் மீது வழக்கு

ஆண்டிபட்டி அருகே, வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக விருதுநகா் மாவட்டச் சிறை சப்-ஜெயிலா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

ஆண்டிபட்டி அருகே, வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக விருதுநகா் மாவட்டச் சிறை சப்-ஜெயிலா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சோ்ந்தவா் நந்தினி (24). இவருக்கும், விருதுநகா் மாவட்ட சிறைச் சாலையில் சப்-ஜெயிலராகப் பணியாற்றி வரும் மதுரை, பெரியசாமி நகரைச் சோ்ந்த முனீஸ் திவாகா் என்பவருக்கும் கடந்த 2021, செப்டம்பா் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், வரதட்சணையாக மேலும் நகைகள், பணம் கேட்டு வீட்டில் தன்னை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முனீஸ் திவாகா், அவரது தந்தை ராமச்சந்திரன், தயாா் வாசுகி, தம்பி ராஜா, சகோதரி சுமதி ஆகியோா் மீது ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலையத்தில் நந்தினி புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில், முனீஸ் திவாகா் உள்ளிட்ட 5 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.