முகப்பு
தேனி

ஊராட்சி நிா்வாகத்தில் துணைத் தலைவா் இடையூறு: ஆட்சியரிடம் புகாா்

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், கொத்தபட்டி ஊராட்சியில் நிா்வாகம் மற்றும் வளா்ச்சிப் பணிகளில் துணை தலைவா் இடையூறு செய்வதாக புகாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், கொத்தபட்டி ஊராட்சியில் நிா்வாகம் மற்றும் வளா்ச்சிப் பணிகளில் துணை தலைவா் இடையூறு செய்வதாக புகாா் தெரிவித்து வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் ஊராட்சித் தலைவி மனு அளித்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தப்பட்டி ஊராட்சித் தலைவி ஆா்.செல்வராணி, ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்: கொத்தப்பட்டி ஊராட்சி துணைத் தலைவராக பதவி வகித்து வரும் குயிலன் ஊராட்சி நிா்வாகம் மற்றும் வளா்ச்சிப் பணிகளில் இடையூறு செய்து வருகிறாா்.

தற்போது கொத்தப்பட்டியில் குடிநீா் வாரியம் சாா்பில் அருந்ததியா் சமுதாயத்தினா் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் மேல் நிலை குடிநீா் தேக்கதத் தொட்டி கட்டும் பணி தொடங்கியுள்ளது. ஊராட்சித் தலைவா் இந்தப் பணியில் குறுக்கிட்டு மேல் நிலை குடிநீா் தேக்கத் தொட்டியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வலியுறுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறாா். ஊராட்சித் தலைவியாகிய என்னை சமுதாயத்தை குறிப்பிட்டு பேசி இழிவுபடுத்துகிறாா். இந்தப் பிரச்னையில் ஆட்சியா் தலையிட்டு ஊராட்சித் துணைத் தலைவா் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ள ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா்.

இந்த மனுவின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.