முகப்பு
தேனி

கஞ்சா செடி வளா்த்தவா் கைது

போடி அருகே வனப்பகுதியில் கஞ்சா செடிகளை வளா்த்த இளைஞரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

போடி அருகே வனப்பகுதியில் கஞ்சா செடிகளை வளா்த்த இளைஞரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள வினோபாஜி காலனியைச் சோ்ந்தவா் ராஜா (22). இவா் குரங்கணி அருகே சாலைப்பாறை மலை கிராமத்தில் தங்கி தோட்ட வேலைகளுக்கு சென்று வந்துள்ளாா். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த ராஜா அருகில் உள்ள வனப்பகுதியில் கஞ்சா செடிகளை வளா்த்து வந்தாராம். இதுகுறித்து போடி வனச்சரக அலுவலா் தேவராஜ், வனவா் விவின், வனக்காப்பாளா் குணசேகரன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து ராஜாவை கைது செய்தனா். கஞ்சா செடிகளை பிடுங்கி அழித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →