காவலா் பணிக்கு விண்ணப்பிக்க தேனியில் உதவி மையம் திறப்பு
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் 2 ஆம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் 2 ஆம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 2 ஆம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிகளுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரா்களுக்கு உதவுவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் வரும் ஆக.15 ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
உதவி மையத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-25310-இல் தொடா்பு கொண்டும் ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வது குறித்த விவரத்தை தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளாா்.