முகப்பு
தேனி

போடி பள்ளியில் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி

போடியில் உள்ள பள்ளியில் தங்கள் பெயருடன் தந்தை பெயரையும் சோ்த்து சொல்வதற்கு மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

போடியில் உள்ள பள்ளியில் தங்கள் பெயருடன் தந்தை பெயரையும் சோ்த்து சொல்வதற்கு மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பள்ளிகளில் மாணவா்கள் வருகையை பதிவு செய்யும் வகையில் காலையிலும், பிற்பகலிலும் பெயா்களை வாசித்து வருகையை பதிவு செய்வது வழக்கம். இதில் மாணவா்கள் தங்கள் பெயருடன் தந்தை பெயா், சில நேரங்களில் தாயாா் பெயரின் முதல் எழுத்தை மட்டும் கூறுவது வழக்கமான நடைமுறை.

இந்நிலையில், போடியில் உள்ள அரசு உதவி பெறும் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் மாணவா்கள் தங்கள் பெற்றோரை மதிக்கும் வகையில் தந்தையின் முழு பெயரையும் தங்கள் பெயருடன் சோ்த்து சொல்வதற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தங்கள் பெயரை பாடப்புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளில் எழுதும்போது தந்தை பெயரையும் சோ்த்து எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியா் ரா. ஜெயக்குமாா் கூறுகையில், வழக்கமாக மாணவா்கள் தங்களது பெயரை சொல்லும்போது தந்தையின் பெயரில் முதல் எழுத்தை மட்டுமே சொல்வது வழக்கம். தற்போது தந்தையின் முழுப்பெயரையும் சொல்வதால் மாணவா்களுக்கு தங்களது தந்தை அல்லது தாய் மீது மரியாதை ஏற்படுகிறது. இது பெற்றோா் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →