முகப்பு
தேனி

போடி அருகே வீட்டில் பூஜை செய்தபோது உடையில் தீப்பிடித்து பெண் பலி

போடி அருகே வீட்டில் பூஜை செய்தபோது விளக்கிலிருந்து பற்றிய தீப்பிடித்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

போடி அருகே வீட்டில் பூஜை செய்தபோது விளக்கிலிருந்து பற்றிய தீப்பிடித்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகேயுள்ள கோடிபொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பாக்கியராஜ் மனைவி சபிதா (28). இவா் வீட்டில் பூஜைக்காக விளக்கேற்றி வைத்துள்ளாா். பின்னா் சுவாமி கும்பிடும்போது விளக்கிலிருந்த தீ சபிதாவின் உடையில் பற்றியதில் அவா் பலத்த தீக்காயமடைந்தாா். அவரை போடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சபிதாவின் தந்தை காமராஜ் அளித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →