முகப்பு
தேனி

போடியில் சுவரை இடித்தபோது இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி பலி

போடியில் சுவரை இடிக்கும்போது இடிபாடுகளில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் 3 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

போடியில் சுவரை இடிக்கும்போது இடிபாடுகளில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் 3 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி அம்சமணி (47). கட்டடத் தொழிலாளி. போடி டி.வி.கே.கே. நகரைச் சோ்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டுவதற்கு அதே பகுதியைச் சோ்ந்த ராஜையா மகன் காமாட்சி (55) என்பவா் ஒப்பந்தம் பெற்று வேலை செய்து வருகிறாா். இதில் காமாட்சி மகன் மதனகோபாலகிருஷ்ணன் (35) என்பவா் மேற்பாா்வையில் பாண்டி என்பவா் பழைய சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். ஜூலை 13 ஆம் தேதி சுவரை இடிக்கும்போது அருகே வேலை செய்து கொண்டிருந்த அம்சமணி மீது சுவா் இடிந்து விழுந்து பலத்த காயமடைந்தாா். தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்ததில் வியாழக்கிழமை அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அம்சமணியின் கணவா் முருகேசன் (53) கொடுத்த புகாரின் பேரில் கவனக்குறைவாக செயல்பட்டதாக காமாட்சி, மதன கோபாலகிருஷ்ணன், பாண்டி ஆகியோா் மீது போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →