முகப்பு
தேனி

கூடலூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மண்டல மேலாளா் ஆய்வு

தேனி மாவட்டம், கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான இடத்தை, மண்டல மேலாளா் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

தேனி மாவட்டம், கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான இடத்தை, மண்டல மேலாளா் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

கூடலூரில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேலான பரப்பளவில் இரண்டு போக, நன் செய் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த காலங்களில் தனியாா் இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, பாதுகாப்பற்ற முறையில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டதால், அவை மழையில் நனைந்தும், பயிா் முளைத்தும், ஈரப்பதத்தால் விலை குறைவாக கொள்முதல் செய்தல், தனியாா் தலையீடு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடந்தன.

இதை, பாரதிய கிசான் சங்கம் மற்றும் முல்லைச்சாரல் விவசாய சங்கத்தினா் கண்டித்து போராட்டம் நடத்தினா். மேலும், கூடலூரில் உள்ள அரசு இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன் உத்தரவின்பேரில், தேனி மாவட்ட நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் செந்தில், கூடலூருக்கு வியாழக்கிழமை வந்தாா். அரசு இடங்களான பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பயணியா் விடுதி, எம்ஜிஆா் காலனியில் உள்ள அரசினா் மாணவியா் விடுதி வளாகம் உள்ளிட்ட இடங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமா்ப்பிக்க போவதாகத் தெரிவித்தாா்.

இந்த ஆய்வில், பாரதிய கிசான் சங்க மாவட்டத் தலைவா் எம். சதீஸ்பாபு, முல்லைப் சாரல் விவசாய சங்கத் தலைவா் கொடியரசன் உள்ளிட்ட விவசாயிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →