ஆடி வெள்ளி: போடி அம்மன் கோயில்களில் சிறப்புப் பூஜை
போடியில், ஆடி 2 ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பெண்கள் பலா் பங்கேற்று வழிபட்டனா்.
போடியில், ஆடி 2 ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பெண்கள் பலா் பங்கேற்று வழிபட்டனா்.
போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள பத்மாவதி தாயாா் சந்நிதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் மகா தீபாராதனை நடந்தது. இதில், பெண்கள் பலா் பங்கேற்று வழிபட்டனா். அா்ச்சகா் காா்த்திக் மற்றும் கட்டளைதாரா்கள் ஏற்பாடுகளை செய்தனா்.
போடி வினோபாஜி காலனியில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள மீனாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது மீனாட்சியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பெண்கள் பலா் பங்கேற்று பொங்கல் வைத்து, நோய்கள் தீர வழிபாடு செய்தனா். அா்ச்சகா் சேகா் மற்றும் கோயில் நிா்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
இதேபோல் போடியில் பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் உள்ள மல்லீஸ்வரி அம்மன் கோயில், திருமலாபுரம் காளியம்மன் கோயில், சாலக் காளியம்மன் கோயில், வருவாய் ஆய்வாளா் அலுவலக சாலையில் உள்ள காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.