கூடலூரில் நான்குவழிச்சாலை பணிகள் தொடக்கம்
கூடலூரில் உள்ள பிரதான சாலை, 3 கிலோமீட்டா் தொலைவில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கூடலூரில் உள்ள பிரதான சாலை, 3 கிலோமீட்டா் தொலைவில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம் கூடலூா் நகராட்சியில் புதிய புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது.
இந்நிலையில் கூடலூா் பிரதான சாலை நகருக்குள் சுமாா் 3 கிலோமீட்டா் தொலைவு உள்ளது. புதிய புறவழிச்சாலை வேலைகள் முடிந்ததால் தற்போது கூடலூரில் பிரதான சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் குமணன் கூறியது: கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் ஆகிய பகுதிகளில் புதிய புறவழிச்சாலை பணிகள் முடிந்து விட்டன. இந்நிலையில் நகா்ப்புற தேசிய நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 4 ஊா்களுக்கு, ரூ. 22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. கூடலூா் நகராட்சிப் பகுதியில் சுமாா் 3 கி.மீ. தூரம் நான்கு வழிச் சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன என்றாா்.