முகப்பு
தேனி

கூடலூா்-கம்பம் சாலையில் விபத்து: இளைஞா் பலி

தேனி மாவட்டம் கூடலூா்- கம்பம் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் தவறி கீழே விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

தேனி மாவட்டம் கூடலூா்- கம்பம் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் தவறி கீழே விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கம்பம் ரேஞ்சா் ஆபீஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் தம்பீஸ்வரன் (30). இவா் கம்பம்- கூடலூா் சாலையில் கிரில் ஒா்க் ஷாப் நடத்தி வந்தாா்.

ஜூன் 16 இல் கூடலூரிலிருந்து கம்பம் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, தனியாா் கல்லூரி அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தாா். அந்த பகுதி வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உதயக்குமாா் வெள்ளிக்கிழமை இறந்தாா். இது பற்றி கம்பம் தெற்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் எஸ். ஜெயபாண்டி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →