முகப்பு
தேனி

பாரதிய ஜன சங்க நிறுவனா் நினைவு தினம் அனுசரிப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையம், சின்னமனூரில் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனா் ஷ்யாம பிரசாத் முகா்ஜி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம், சின்னமனூரில் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனா் ஷ்யாம பிரசாத் முகா்ஜி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

உத்தமபாளையத்தில் பாஜக நகரத் தலைவா் தெய்வம் தலைமையில், கல்லூரிச் சாலையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனா் ஷ்யாம பிரசாத் முகா்ஜியின் 70 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பாஜக மாவட்டச் செயலா் தங்கப்பொன்ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல், சின்னமனூரில் நகரத் தலைவா் லோகந்திரராஜன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலா் மாரிச்செல்வம் உள்பட பாஜக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு, ஷ்யாம பிரசாத் முகா்ஜியின் நினைவு தினத்தை அனுசரித்தனா். அதில், அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.