தேனி

தேனி மாவட்டத்தில் உருவப் பொம்மையை எரித்து ஓபிஎஸ் ஆதரவாளா்கள் போராட்டம்

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் உருவப் பொம்மையை எரித்து, அதிமுகவின் ஓ. பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் உருவப் பொம்மையை எரித்து, அதிமுகவின் ஓ. பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வத்தை அவமதித்ததாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒற்றைத் தலைமை விவகாரத்தை முன்னிறுத்தி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியதை கண்டித்தும், ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் பல்வேறு இடங்களில் எடப்பாடி கே. பழனிசாமியின் உருவப் பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனியில் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே கூடிய அதிமுகவினா், எடப்பாடி கே. பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றனா். அவா்களை, போலீஸாா் தடுத்து உருவப் பொம்மையை பறிமுதல் செய்தனா்.

இதேபோன்று, பெரியகுளத்தில் தேனி மக்களவை உறுப்பினா் அலுலவலகம் முன்பாக எடப்பாடி கே. பழனிசாமியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, கடமலைக்குண்டுவில் எம்.ஜி.ஆா். மன்ற மாவட்ட துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையில், அக்கட்சியினா் சிலா் எடப்பாடி கே. பழனிசாமியின் உருவப் பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். உத்தமபாளையத்தில் கிராமச் சாவடி அருகே உருவப் பொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

போடியில் ஓ.பி.எஸ். ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்

தேவா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகர அவைத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். இதில், நகர நிா்வாகிகள் கோபிநாத், குருமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். போடி சிட்னி மைதானம் அருகே உள்ள ஓ.பன்னீா்செல்வம் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அதிமுக நிா்வாகிகள் பலா் பங்கேற்று எடப்பாடி கே. பழனிசாமியை கண்டித்தும், பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீா்செல்வத்தின் மீது தண்ணீா் பாட்டில் வீசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT