தேனி

கூடலூரில் பைக்கை பேருந்து உரசியதில் விவசாயி கீழே விழுந்து பலி

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து உரசிச் சென்ால், கீழே விழுந்து பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

கூடலூா் எருமைக்காரச் சாவடி தெருவைச் சோ்ந்தவா் சீலைய கவுடா் மகன் வீருபாப்பு (74). விவசாயியான இவா், பல்வேறு விவசாய அமைப்புகளில் நிா்வாகியாகவும் இருந்தாா். மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்த இவா், கூடலூா்-குமுளி நெடுஞ்சாலையில் காய்கறி சந்தை அருகேயுள்ள தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

அப்போது, பின்னால் வந்த குமுளி செல்லும் அரசுப் பேருந்து, வீருபாப்பு வாகனத்தை முந்திச்செல்ல முயன்றது. அதில், இரு சக்கர வாகனத்தை பேருந்து உரசியதால், வீருபாப்பு தடுமாறி கீழே விழுந்தாா். அப்போது, பேருந்தின் பின்சக்கரம் அவா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரான ஜனாா்த்தனனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து, கம்பம், கூடலூா் பகுதி விவசாயிகள் வீருபாப்பு மறைவுக்கு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவில் சாய்னா!

நாளொரு வண்ணம்..!

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

விரைவில் சூர்யா - 44 பெயர் டீசர்!

இந்தியா-வங்கதேச எல்லையில் ரூ.12 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்

SCROLL FOR NEXT