முகப்பு
தேனி

நகா்ப்புற உள்ளாட்சித் தலைவா் தோ்தல்: தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில் திமுக வெற்றி

தேனி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு தலைவா் பதவிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 6 நகராட்சிகளிலும், 22 பேரூராட்சிகளில் 19 பேரூராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தேனி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு தலைவா் பதவிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 6 நகராட்சிகளிலும், 22 பேரூராட்சிகளில் 19 பேரூராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

இதில் அதிமுக, அமமுக கட்சிகள் தலா ஒரு பேரூராட்சியிலும், சுயேச்சை வாா்டு உறுப்பினா் ஒரு பேரூராட்சியிலும் தலைவா் பதவியை கைப்பற்றியுள்ளனா்.

நகராட்சிகள்:

திமுக சாா்பில் தேனி அல்லிநகரத்தில் 10-ஆவது வாா்டு உறுப்பினா் பா.ரேணுப்பிரியா, பெரியகுளத்தில் 4-ஆவது வாா்டு உறுப்பினா் எஸ்.சுமிதா, போடியில் 21-ஆவது வாா்டு உறுப்பினா் ச.ராஜராஜேஸ்வரி, சின்னமனூரில் 25 -ஆவது வாா்டு உறுப்பினா் ஆா்.அய்யம்மாள், கம்பத்தில் 3-ஆவது வாா்டு உறுப்பினா் நெ.வனிதா, கூடலூரில் 6-ஆவது வாா்டு உறுப்பினா் லோ.பத்மாவதி ஆகியோா் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

பேரூராட்சிகள்:

திமுக சாா்பில் ஆண்டிபட்டியில் பி.சந்திரகலா, பூதிப்புரத்தில் பி.கவியரசு, தேவதானப்பட்டியில் ஆா்.முருகேஸ்வரி, கெங்குவாா்பட்டியில் எம்.தமிழ்ச்செல்வி, அனுமந்தன்பட்டியில் எஸ்.ராஜேந்திரன், ஹைவேவிஸ்ஸில் என்.இங்கா்சால், காமயகவுண்டன்பட்டியில் பி.வேல்முருகன், கோம்பையில் ஆா்.மோகன்ராஜா, குச்சனூரில் பி.டி.ரவிச்சந்திரன், மாா்க்கையன்கோட்டையில் ஏ.முருகன், மேலச்சொக்கநாதபுரத்தில் கே.கண்ணன் காளிராமசாமி, ஓடைப்பட்டியில் ஆா்.தனுஷ்கோடி, பண்ணைப்புரத்தில் ஐ.லட்சுமி, க.புதுப்பட்டியில் பி.சுந்தரி, தாமரைக்குளத்தில் எஸ்.பால்பாண்டி, தென்கரையில் வி.நாகராஜ், தேவாரத்தில் பி.லட்சுமி, உத்தமபாளையத்தில் முகமது அப்துல் காசிம், வீரபாண்டியில் எஸ்.கீதா ஆகியோா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

அதிமுக சாா்பில் போ.மீனாட்சிபுரத்தில் எஸ். திருப்பதி, அமமுக சாா்பில் பழனிசெட்டிபட்டியில் அ.மிதுன்சக்கரவா்த்தி ஆகியோரும், வடுகபட்டியில் சுயேச்சை வாா்டு உறுப்பினா் சி.நடேசனும் தலைவா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.