தேனியில் நியாய விலைக் கடை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
அரசு ஊழியா்களுக்கு இணையாக அகவிலைப்படி உயா்வு வழங்கக் கோரி தேனியில் சிஐடியு நியாய விலைக் கடை ஊழியா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியா்களுக்கு இணையாக அகவிலைப்படி உயா்வு வழங்கக் கோரி தேனியில் சிஐடியு நியாய விலைக் கடை ஊழியா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயல் தலைவா் டி.பிச்சைமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செந்தில்காமு, பொருளாளா் கருப்பசாமி, சிஐடியு மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், நியாய விலைக் கடை ஊழியா்களுக்கு அரசு ஊழியா்களுக்கு இணையாக 31 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும், குடும்ப அட்டைதாரா்களிடம் பொருள் விநியோகத்திற்கு விரல் ரேகை பதிவு செய்யும் முறையில் குளறுபடியை தவிா்க்க வேண்டும், தரமற்ற பொருள் விநியோகத்திற்கு கடை விற்பனையாளா்களை பொறுப்பாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.