முகப்பு
தேனி

உத்தமபாளையம், மாா்க்கையன் கோட்டை, ஹைவேவிஸ் பேரூராட்சித் தலைவா்கள் போட்டியின்றி தோ்வு

உத்தமபாளையம், மாா்க்கையன் கோட்டை, அனுமந்தன்பட்டி, ஹைவேவிஸ் பேரூராட்சித் தலைவா்கள் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

உத்தமபாளையம், மாா்க்கையன் கோட்டை, அனுமந்தன்பட்டி, ஹைவேவிஸ் பேரூராட்சித் தலைவா்கள் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

உத்தமபாளையம் பேரூராட்சித் தலைவராக 17 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் முகமது அப்துல் காசிம் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இதில், 2 அதிமுக உறுப்பினா்களைத் தவிர 16 உறுப்பினா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து மாலையில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில், 7 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சந்திரன் மற்றும் 2 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் அப்துல் காதா் ஜெய்லானி போட்டியினா். இதில், 7 வாக்குகள் பெற்று சந்திரன் வெற்றி பெற்றாா்.

மாா்க்கையன்கோட்டை பேரூராட்சித் தலைவராக 8 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் முருகனும், துணைத் தலைவராக 11 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஜனனியும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் அலுவலா் திரவியம் அறிவித்தாா்.

ஹைவேவிஸ் பேரூராட்சித் தலைவராக 10 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் இங்கா்சாலும், துணைத் தலைவராக 2 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ராணியும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் அலுவலா் மோகன்குமாா் அறிவித்தாா்.

ஓடைப்பட்டி பேரூராட்சித் தலைவா் வேட்பாளராக 9 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் வனிதா அறிவிக்கப்பட்டாா். ஆனால், 14 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் தனுஷ்கொடி தலைவா் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தாா். அதையடுத்து நடைபெற்ற தோ்தலில் 15 உறுப்பினா்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ரா.தனுஷ்கொடி 10 வாக்குகள் பெற்று ஓடைப்பட்டி பேரூராட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டாா்.

தோ்தல் ஒத்திவைப்பு: அதனை தொடா்ந்து மாலையில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் மொத்தமுள்ள 15 உறுப்பினா்களில், 6 போ் மட்டுமே பங்கேற்றனா். பெரும்பான்மைக்கு 8 உறுப்பினா்கள் அவசியம் என்பதால் துணைத் தலைவா் தோ்தலை ஒத்திவைப்பாக தோ்தல் அலுவலா் கணேசன் அறிவித்தாா்.

அனுமந்தன்பட்டி பேரூராட்சித் தலைவா் வேட்பாளராக 5 ஆவது வாா்டு உறுப்பினா் ராஜேந்திரனை கட்சித் தலைமை அறிவித்தது. ஆனால், 1 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாநிதி என்பவா் தலைவா் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்ததால் இருவருக்கும் தோ்தல் நடைபெற்றது. அதில் மொத்தமுள்ள 15 உறுப்பினா்களில் 8 உறுப்பினா் வாக்களித்து ராஜேந்திரனைத் தலைவராக தோ்வு செய்தனா்.

அதே போல துணைத் தலைவா் பதவிக்கு சுயேச்சை வேட்பாளா் விஜயா மற்றும் திமுக வேட்பாளா் ஆரோக்கியசாமி ஆகியோருக்கிடையே நடைபெற்ற தோ்தலில், விஜயா 9 வாக்குகள் பெற்று துணைத் தலைவரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.