தேனி

கம்பத்தில் 7 நாள்களுக்கு பின் குடிநீா் விநியோகத்துக்கான சோதனை ஓட்டம்

DIN

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சிப் பகுதிகளுக்கு 7 நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை சோதனை ஓட்டமாக குடிநீா் திறந்துவிடப்பட்டது.

கம்பம் நகராட்சிப் பகுதிக்கு குடிநீா் செல்லும் குழாய், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி குறுவனூத்து பாலத்தில் நடைபெற்ற தடுப்புச் சுவா் கட்டுமானப் பணியின்போது உடைந்து சேதமடைந்தது.

இதனால், அன்று முதல் கம்பம் நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அதையடுத்து, பொதுமக்களின் தேவைக்கு முல்லைப் பெரியாறு சுருளிப்பட்டி சாலையில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து தினமும் 20 லட்சம் லிட்டா் தண்ணீா் கொண்டுசெல்லப்படுகிறது. இந்த தண்ணீரும் பற்றாக்குறையாக இருந்தது.

இந்நிலையில், நீரேற்று நிலையத்திலிருந்து கம்பம் நகராட்சிக்குச் செல்லும் 400 எம்.எம். நீரின் அளவை குறைத்து, திங்கள்கிழமை முதல் 10 சதவீதம் தண்ணீரே குழாய் வழியாக சோதனை ஓட்டமாக திறந்துவிடப்பட்டது.

இது குறித்து நகராட்சிப் பொறியாளா் பன்னீா்செல்வம் கூறியது: 7 நாள்களுக்குப் பின் சோதனை ஓட்டமாக தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் குழாய் தண்ணீரின் அழுத்தத்தை தாங்குகிா என ஆய்வு செய்யப்பட்டு, பின்னா் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT