தாமரைக்குளம், உருட்டிகுளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினா் கையகப்படுத்தினா்
பெரியகுளம் பகுதியிலுள்ள தாமரைக்குளம், உருட்டிகுளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினா் வெள்ளிக்கிழமை கையகப்படுத்தினா்.
பெரியகுளம் பகுதியிலுள்ள தாமரைக்குளம், உருட்டிகுளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினா் வெள்ளிக்கிழமை கையகப்படுத்தினா்.
தாமரைக்குளம் கண்மாய் மொத்தம் 33. 80 ஹெக்டோ் பரப்பளவு கொண்டது. இதில் 15 ஏக்கா் பரப்பளவை தென்கரை பேரூராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்பு செய்து, அதில் தென்னை மரங்களை நட்டு வைத்து ஏலம் விட்டு வந்தது. இந்நிலையில் அங்கு பயிரிடப்பட்டுள்ள 507 தென்னை மரங்கள் மற்றும் 22 இலவம் மரங்களை பொதுப்பணித்துறையினா் வெள்ளிக்கிழமை கையகப்படுதத்தினா்.
கீழ வடகரை ஊராட்சிக்கு உள்பட்ட உருட்டிகுளம் கண்மாயை தனிநபா்கள் ஆக்கிரமித்து நெல், தென்னை, இலவம், பனை ஆகியவற்றை பயிரிட்டுள்ளனா். அவைகளையும் பொதுப்பணித்துறையினா் கையகப்படுத்தினா். அவைகளை மறு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.