கூடலூரில் உண்ணாவிரத பந்தலில் நாற்று நட்டு, துணியை துவைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். 
தேனி

கூடலூர் உண்ணாவிரத பந்தலில் நாற்று நட்டு, துணியை துவைத்து நூதன போராட்டம்

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பிலிருந்து,  மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் மாற்றுத் திட்டத்தை அமல்படுத்த கோரி, 3 ஆவது  நாளாக நடைபெற்ற

DIN

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பிலிருந்து,  மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் மாற்றுத் திட்டத்தை அமல்படுத்த கோரி, 3 ஆவது  நாளாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பெண்கள் நாற்று நட்டும், துணி துவைத்தும் நூதன முறையில் திங்கள்கிழமை போராடினர்.

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பிலிருந்து, மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் மாற்றுத் திட்டமான வைகை அணையிலிருந்து  தண்ணீர் எடுக்க கோரி, கடந்த சனிக்கிழமை தொடர்ந்த உண்ணாவிரதம் திங்கள்கிழமை 3-வது  நாளாக பேருந்து நிலையம் அருகே  நடைபெற்றது.

சலவை தொழிலாளர்கள், அனைத்து விவசாய சங்கத்தினர் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதை கண்டித்து, உண்ணாவிரத பந்தல் முன்பு நாற்று நட்டனர். பின்னர் துணி துவைத்தும், விவசாயம் மற்றும் சலவை தொழிலால் ஏற்படும் பாதிப்பை நூதன முறையில் போராடினர். இந்த போராட்டம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழையால் கைவிடப்பட்ட முதல் டி20 போட்டி!

8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும்: ரஷ்மிகா மந்தனா

நவ. 5-ல் தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டம்!

நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ?... சிம்ரன் கௌர்!

Tourist Family இயக்குநருக்கு BMW கார்!

SCROLL FOR NEXT