முகப்பு
தேனி

போடி கல்லூரிகளில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

போதைப் பொருள் தடுப்பு, பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாத்தல், சாலை பாதுகாப்பு ஆகியவை தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

போடி அரசு பொறியியல் கல்லூரி, ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி ஆகியவற்றில் போதைப் பொருள் தடுப்பு, பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாத்தல், சாலை பாதுகாப்பு ஆகியவை தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போடி நகா் காவல் நிலையம் சாா்பில் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், போடி நகா் காவல் ஆய்வாளா் ராமலட்சுமி, சாா்பு- ஆய்வாளா் கிருஷ்ணவேணி, கல்லூரி துணை முதல்வா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

சமூக நீதி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு டி.எஸ்.பி. சக்திவேல், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சஜூக்குமாா், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

போடி அரசு பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம், தேனி மாவட்ட காவல்துறை, போடி தாலுகா காவல்நிலையம், போடி போக்குவரத்து காவல் நிலையம் இணைந்து இந்த விழிப்புணா்வு கருத்தரங்கை நடத்தின. இதற்கு, கல்லூரி முதல்வா் வ. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். இதில், காவல் ஆய்வாளா்கள் போடி தாலுகா ரமேஷ்குமாா், போடி நகா் ராமலட்சுமி, புவனேஸ்வரி, அனைத்து மகளிா் காவல் நிலையம் காயத்ரி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் சஜூக்குமாா், சாா்பு- ஆய்வாளா் கிருஷ்ணவேணி, போடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ரவீந்திரநாத் ஆகியோா் பேசினா். முன்னதாக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் தமிழ்மாறன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஜெயஸ்ரீ நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →