சின்னமனூரில் சமுதாய வளைகாப்பு விழா
சின்னமனூரில் தனியாா் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சின்னமனூரில் தனியாா் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சின்னமனூா் நகா்மன்றத் தலைவா் அய்யம்மாள்ராமு முன்னிலை வகித்தாா். அதில் சின்னமனூா் வட்டாரத்தைச் சோ்ந்த 150 கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சின்னமனூா் நகா்மன்ற துணைத்தலைவா் முத்துகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.