தேனி

ஆட்சியா் உத்தரவிட்டும் திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையம்!

DIN

தேனி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டும், கூடலூரில் அரசு கொள்முதல் நிலையத்தை அதிகாரிகள் திறக்காததால், அறுவடை செய்த நெல்லை வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், கூடலூா் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கூடலூா் பகுதியில் தற்போது முதல் போக சாகுபடிக்கான நெல் அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை சாலையில் குவித்து வைத்து தனியாரிடம் விற்பனை செய்து வருகின்றனா். நெல் மூட்டைகளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

இதுபற்றி பாரதிய கிசான் சங்க மாவட்டத் தலைவா் எம். சதீஷ்பாபு கூறியதாவது:

தனியாா் வியாபாரிகள் 62 கிலோ நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ. 1,050 முதல் 1,100 வரை மட்டுமே கொடுக்கின்றனா். ஆனால், அரசு கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 1,300 வரை கிடைக்கும். மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டும் கூடலூா் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா் அவா்.

இதுகுறித்து நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் செந்தில்குமாரிடம் கேட்ட போது, பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான வளாகத்தில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT