தேனி

முல்லைப் பெரியாறு நீர் திறப்பு குறைவு: லோயர் கேம்ப்பில் மின் உற்பத்தி பாதிப்பு

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைந்ததால் லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் குறைந்தது.

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைந்ததால் லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி,136.95 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 152), நீர் இருப்பு 6357 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு, 2,389.17 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 1,200 கன அடியாகவும் இருந்தது.

கடந்த செப். 4-ல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு 1866 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.

அதே நேரத்தில் செவ்வாய்க்கிழமை அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், லோயர் கேம்ப்பில் 108 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

இதுபற்றி பொறியாளர் ஒருவர் கூறியது, வைகை அணையில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT