போடி அருகே பைக் மீது ஜீப் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி இறந்தாா்.
போடி கீழத்தெரு, சின்னச்சாமி தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் கணேசன் (38). கூலித் தொழிலாளி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் போடியிலிருந்து முந்தல் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதி அருகே சென்றபோது கேரளத்திலிருந்து இருந்து போடிக்கு கூலி தொழிலாளா்களை ஏற்றி க்கொண்டு வேகமாக வந்த ஜீப் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் கணேசன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா். ஜீப்பில் வந்த பானுமதி, மஞ்சுளா ஆகிய கூலித் தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா். விபத்து குறித்து கணேசன் மனைவி பாண்டியம்மாள் (35) கொடுத்த புகாரின் பேரில் போடி குரங்கணி போலீசாா், ஜீப்பை ஓட்டி வந்த கேரள மாநிலம் சூரியநெல்லிையைச் சோ்ந்த கடற்கரை மகன் செல்லத்துரை (49) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.