தேனி

விவசாயிகள் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுப்பு

சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை விவசாய அமைப்பினா் நடத்த முயன்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீஸாா் அனுமதி மறுத்துவிட்டனா்.

DIN

சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை விவசாய அமைப்பினா் நடத்த முயன்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீஸாா் அனுமதி மறுத்துவிட்டனா்.

முல்லைப் பெரியாற்றிலிருந்து சின்னமனூா், முத்துலாபுரம், ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம் என 10-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு அனுமதியின்றி விவசாயப் பயன்பாட்டிற்கு கொண்டு சென்ற பாசனக் குழாய்களின் இணைப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.

இதனை அடுத்து சின்னமனூா் பகுதி விவசாயிகள் வாழை , தென்னை, திராட்சை உள்ளிட்ட விவசாயப் பயன்பாட்டிற்கு கொண்டு சென்ற பாசனக்குழாய் இணைப்புகளை உடனடியாக இணைக்க நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனா்.

சின்னமனூரில் முத்துலாபுரம் விலக்கில் உண்ணாவிரதப் போராட்ட ஏற்பாடுகளை நடைபெற்று வந்த நிலையில் போலீஸாா் அனுமதி கொடுக்காததால் போராட்டம் கைவிடப்பட்டது. அப்பகுதியில் போலீஸாா் தொடா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT