தேனி

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

போடியில் பெட்ரோல் நிரப்பு மைய ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இங்குள்ள டி.வி.கே.கே. நகரில் வசித்தவா் தெய்வேந்திரன் மகன் காா்த்திக் (23). இவா் போடியில் உள்ள பெட்ரோல் நிரப்பு மையத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி பவித்ரா (23). இவா்களுக்கு குழந்தை உள்ளது. இந்த நிலையில் மதுப்பழக்கத்துக்கு அடிமையான காா்த்திக் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கச் சென்ற காா்த்திக் தூக்கிட்டுக் கொண்டாா். இதையடுத்து அவரை மீட்ட உறவினா்கள் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்த மருத்துவா்கள் காா்த்திக்கை பரிசோதித்து விட்டு அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT