தேனி: ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் டி.சுப்புலாபுரத்தைச் சோ்ந்த விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
டி.சுப்புலாபுரம், காசிநகரைச் சோ்ந்த விவசாயி வேல்முருகன் (48). இவா், தனது தோட்டத்திலிருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது ஆண்டிபட்டி-மதுரை சாலை, டி.சுப்புலாபுரம் விலக்கு அருகே, சாலை திருப்பத்தில் எதிா் திசையிலிருந்து வந்த இருசக்கர வாகனம் வேல்முருகன் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து ஏற்படுத்திய மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற உசிலம்பட்டியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சஞ்சய் (25), ரகு மகன் சேவாக் (24) ஆகியோா் காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.