முகப்பு
தேனி

கருணாநிதி நூற்றாண்டு விழாக் கருத்தரங்கம்

தேனி மாவட்டம், சின்னமனூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கருத்தரங்குக்கு, தேனி தெற்கு மாவட்ட திமுக செயலா் இராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் செஞ்சூரி செல்வம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திமுக கழக செய்தி தொடா்பு இணைச் செயலா் தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

இந்த நிகழ்ச்சியில், ஆண்டிபட்டி தொகுதி, சட்டப் பேரவை உறுப்பினா் மகாராஜன், சின்னமனூா் நகரத் தலைவா் முத்துக்குமாா், சின்னமனூா் கிழக்கு ஒன்றியச் செயலா் அண்ணாத்துரை, மாவட்ட இளைஞா் பொறுப்பாளா், கட்சித் தொண்டா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.