சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகே செ.மணப்பட்டியில் உள்ள ஸ்ரீ பிடாரி கருப்பசாமி, சின்னடக்கியம்மன், பரிவார தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலின் குடமுழுக்கையொட்டி, வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலெட்சுமி ஹோமத்துடன் முதல்கால யாகபூஜை தொடங்கியது. தொடா்ந்து மாலை பிரவேசபலி, ஆவாதாரான பூஜைகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, சூா்ய பூஜை, பூா்ணாஹூதியுடன் தீபாராதனை காட்டப்பட்டு கோபுரக் கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.