தேனி

ஜூன் 27, 28 தேதிகளில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

எரசக்கநாயக்கனூா், போடிதாசன்பட்டி ஆகிய இடங்களில் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.

DIN

எரசக்கநாயக்கனூா், போடிதாசன்பட்டி ஆகிய இடங்களில் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் எரசக்கநாயக்கனூரில் வருகிற 27-ஆம் தேதியும், போடிதாசன்பட்டியில் மறுநாள் 28-ஆம் தேதியும் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கால்நடைகளுக்கு குடல்புழு நீக்கம், வெறிநாய்கடி தடுப்பூசி, ராணிகட் நோய் தடுப்பூசி போடப்படும்.

மேலும் அறுவைச் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், கரு பரிசோதனை, சாணம், ரத்தம் மற்றும் பால் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மலடு நீக்க தாது உப்புக் கலவை வழங்கப்படும். விவசாயிகள் தங்களது கால்நடைகளை இந்த முகாமுக்கு அழைத்து வந்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT