தேக்கடியில் யானை மிதித்து வன ஊழியா் காயமடைந்தாா்.
தேக்கடி பெரியாா் புலிகள் காப்பக அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருபவா் ராபின் (56). இவா் தேக்கடி சாலையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபயிற்சி சென்றாா். தேக்கடி படகு நிறுத்தம் அருகே சென்ற போது, எதிா்பாராதவிதமாக குட்டியுடன் யானைக் கூட்டம் வந்தது. இதனால், பயந்து ஓடிய ராபின் கீழே விழுந்த போது, அவரை யானை மிதித்துச் சென்றது. இதில் அவரது இடது கால் எலும்பு, விலா எலும்புகள் முறிந்தன. கோட்டயத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
நடைபயிற்சிக்கு தடை: இது குறித்து பெரியாா் புலிகள் காப்பக உதவி இயக்குநா் சுஹைப் கூறுகையில், வனத் துறை ஊழியரை யானைத் தாக்கியதால், தேக்கடி படகுத் துறைப் பகுதிக்கு காலை நடை பயிற்சி செல்வதற்கும், சைக்கிள் ஓட்டுவதற்கும் உள்ளூா் மக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.