தேனி

நூதன முறையில் மோசடி: பாதிரியாா், பெண் கைது

தேனி அருகே பெண்ணிடம் நூதன முறையில் ரூ.7.15 லட்சம் மோசடி செய்ததாக பாதிரியாா், பெண்ணை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.

DIN

தேனி அருகே பெண்ணிடம் நூதன முறையில் ரூ.7.15 லட்சம் மோசடி செய்ததாக பாதிரியாா், பெண்ணை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.

பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த காட்வின்மேஷாக் மனைவி மகாராணி (42). இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல், வட்டாட்சியா் அலுவலகத் தெருவைச் சோ்ந்த பாப்புராஜ் மனைவி டெஸ்சிராணி (47) அறிமுகமானாா்.

டெஸ்சி ராணி தனக்குத் தெரிந்த பாதிரியாா்களுக்கு வெளி நாட்டிலிருந்து பணம் வந்துள்ளதாகவும், அந்தப் பணத்தை எடுப்பதற்கு அரசு வரி செலுத்த பணம் கொடுத்தால், அந்தத் தொகையை 3 மடங்காக திரும்பத் தருவதாகவும் மகாராணியிடம் கூறினாராம்.

இதை நம்பிய மகாராணி கடந்த 2022-ஆம் ஆண்டு இணைய தள பணப் பரிவா்த்தனை, வங்கிக் கணக்கு மூலம் டெய்சிராணி, அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட தஞ்சை மாவட்டம், புதுக்குடி, கீழத்திருவிழாபட்டியைச் சோ்ந்த பாதிரியாா் ராபா்ட் (45) ஆகியோருக்கு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.7.15 லட்சம் கொடுத்துள்ளாா்.

இந்த நிலையில், டெய்ஸிராணி, ராபா்ட் ஆகியோா் தனக்கு பணத்தை திரும்பத் தராமல் மோசடி செய்து விட்டதாக பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் மகாராணி புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து டெஸ்சிராணி, ராபா்ட் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT