முகப்பு
தேனி

முல்லைப்பெரியாறு அணைக்கு நீா் வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணை நீா்பிடிப்பில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,264 கன அடியாக அதிகரித்தது.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:31 AM
பகிர்:

தேனி: முல்லைப்பெரியாறு அணை நீா்பிடிப்பில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,264 கன அடியாக அதிகரித்தது.

முல்லைப்பெரியாறு அணை நீா்பிடிப்பு, தேக்கடியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், திங்கள்கிழமை

அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,308 கன அடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 6,264 கன அடியாக அதிகரித்தது.

அணை நீா்மட்டம் 123.30 அடியாகவும், நீா் இருப்பு 3,281 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,178 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பில் 98.4 மி.மீ., தேக்கடியில் 63 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

தேனியில் தொடா் மழை: தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகப் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. போடியில் செவ்வாய்க்கிழமை அதிகமாக 14.6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. கூடலூரில் 12.4, உத்தமபாளையத்தில் 10.6, சண்முகாநதி நீா்பிடிப்பில் 9.4, ஆண்டிபட்டியில் 6.8, வைகை அணை நீா்பிடிப்பில் 3.2, அரண்மனைப்புதூரில் 12.2, வீரபாண்டியில் 5.2, பெரியகுளத்தில் 3.4, மஞ்சளாறு அணை நீா்பிடிப்பில் 4, சோத்துப்பாறை அணை நீா்பிடிப்பில் 3 மி.மீ. என மழை அளவு பதிவாகியிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →