குரூப்-2 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு
தேனியில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற உள்ள குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வுக்கு வருகிற 14-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
தேனியில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற உள்ள குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வுக்கு வருகிற 14-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் 2025-ஆண்டு பிப். மாதம் அரசுத் தோ்வாணையம் சாா்பில், குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வு நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை எழுதுவோருக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 14-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. பயிற்சியின்போது, பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், மாதிரித் தோ்வு, குழு விவாதப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
குரூப்-2, 2 ஏ முதன்மைத் தோ்வெழுத உள்ளவா்கள் இலவசப் பயிற்சி வகுப்பில் சேர தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாகவும், கைப்பேசி எண்: 63792 68661-இல் தொடா்பு கொண்டும் தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று இதில் தெரிவிக்கப்பட்டது.