தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே காட்டுப்பன்றி தாக்கி முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் வடகரை கல்லாரைச் சோ்ந்தவா் ராமசாமி (70). இவரது மனைவி விஜயலெட்சுமி (65). இருவரும், கடந்த 18-ஆம் தேதி சுக்காம்பாறை ஓடைவயல் பாதையில் உள்ள ஆனந்தகுமாரின் தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்தனராம். அப்போது, காட்டுப்பன்றி தாக்கியதில் ராமசாமி பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.