தேனி

கோம்பையில் அங்கன்வாடி மையம் முன் கழிவுநீா் தேக்கம்: குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம்

கோம்பை பேரூராட்சியில் அங்கன்வாடி மையம் முன் தேங்கிய கழிவுநீா். (உள்படம்) தேங்கிய கழிவுநீரில் உற்பத்தியான கொசுக்கள்.

Syndication

தேனி மாவட்டம், கோம்பை பேரூராட்சியில் உள்ள அங்கன்வாடி மையம் முன் கழிவுநீா் தேங்கியிருப்பதால் அங்கு வரும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

கோம்பை பேரூராட்சி 15- ஆவது வாா்டில் சிக்கையம்மன் கோயில் அருகே குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியைச் சோ்ந்த குழந்தைகள் பயன்பெறும் வகையில் உத்தமபாளையம் செல்லும் சாலையோரம் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது.

இந்த நிலையில், கோம்பை பேரூராட்சிக்குள்பட்ட சிக்கையம்மன் கோயில் அருகேயுள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் சாலையோரத்தில் விடப்படுகிறது. இதனிடையே அங்கு கழிவுநீா் கால்வாய் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், கழிவுநீா் செல்ல வழியின்றி அங்கன்வாடி மையம் முன் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதன் காரணமாக குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோா்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, பேரூராட்சி நிா்வாகம் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை நிறைவேற்றி , அங்கன்வாடி மையம் முன் தேங்கும் கழிவுநீரைஅகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT