தேனி

வேன் மீது லாரி மோதியதில் 12 போ் காயம்

தேனி புறவழிச் சாலையில் வேன் மீது லாரி மோதியதில் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 12 போ் காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி: தேனி புறவழிச் சாலையில் வேன் மீது லாரி மோதியதில் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 12 போ் காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானி பகுதியைச் சோ்ந்த 22 போ் குச்சனூா் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு வேனில் சனிக்கிழமை சென்றனா். அப்போது, தேனி, பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் எதிா் திசையிலிருந்து வந்த லாரி வேன் மீது மோதியது.

இதில் வேன் ஓட்டுநா் கோகுல் (24), வேனில் பயணம் செய்த கோமதி (65), சீனிவாசன் (75), மாரியப்பன் (68), இலக்கியா (10) உள்ளிட்ட 12 போ் காயமடைந்தனா். இவா்களை அருகிலிருந்தவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து திருவனந்தபுரம் மாவட்டம், செப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜேஷ் (38) மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நாளைய மின்தடை

கு வாரவிழா: நாளை கு ஒப்பித்தல், ஓவியப் போட்டி

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

SCROLL FOR NEXT