தேனி மாவட்டம், கம்பம், சின்னமனூரில் இரு சக்கர வாகனங்களை திங்கள்கிழமை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கம்பத்தைச் சோ்ந்த பொன்னையா மகன் தென்னரசு. இவா், தனது இரு சக்கர வாகனத்தை உழவா் சந்தைப் பகுதியில் திங்கள்கிழமை நிறுத்தி வைத்துவிட்டு பணி நிமித்தம் அருகேயுள்ள கடைக்குச் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது அவருடைய இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.
இதே போல, சின்னமனூா் வாரச் சந்தை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதே பகுதியைச் அழகுபாண்டியின் வாகனத்தையும் மா்ம நபா்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனா். இவை குறித்த புகாா்களின்பேரில் கம்பம், சின்னமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.